Anbu Thasan -அன்பு தாசன்

Anbu Thasan -அன்பு தாசன் காதல் சாம்ராஜ்யம்

வெற்றி மீது வெற்றி வந்து சேர சில ஆலோசனைகள்...!!பல பேர் நினைப்பார்கள்.. ஆஹா.. நாம் வெற்றி பெற்று விட்டோம்.. எல்லோரையும் வ...
24/06/2021

வெற்றி மீது வெற்றி வந்து சேர சில ஆலோசனைகள்...!!

பல பேர் நினைப்பார்கள்.. ஆஹா.. நாம் வெற்றி பெற்று விட்டோம்.. எல்லோரையும் விட நாமதான் முதலில் என்று பலர் கருதுவார்கள். அது உண்மையல்ல.. வெற்றி என்பது என்னவென்றால் இதற்கு முன்பு நீங்கள் சுமாராக செய்ததை இப்போது சிறப்பாக செய்துள்ளீர்கள் என்றுதான் பொருள். இது நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கிடையாது.

வெற்றி என்பது தொடக்கமே தவிர முடிவல்ல.. வெற்றிகள் தொடரும்போதுதான் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் முடியும்.. நிறையப் பேர் இதை மனதில் கொள்வதில்லை. வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள மேன்மேலும் உழைக்க வேண்டும்

வெற்றிக்காகப் போராடும் நாம் வெற்றி கிட்டியவுடன் அது நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வெற்றி எளிதில் கிடைக்காது. சிறந்த திட்டமிடல் மிகவும் அவசியம். கடினமான உழைப்பும் முயற்சியும் அவசியம். வெற்றி அடைவதற்கு நாம் போராட வேண்டுமென்றால் அந்த வெற்றி நம்முடனே இருப்பதற்கு இன்னும் அதிக முயற்சி வேண்டும்.

நாம் நம் இலக்குகளை அடைய தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும். கடின உழைப்பும் சிறந்த பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம். எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்.

கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக இருங்கள். உங்களால் முடியும் என்று நம்புங்கள். வாழ்க்கையில் வெற்றி வாகை சூடுவது ஒரு சுகம் என்றால் அந்த வெற்றியைத் தக்க வைப்பதில் ஏற்படும் சுகம் இன்னும் அதிகம். எல்லா செயல்களிலும் வெற்றி பெறுங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே இருங்கள்.

ஒவ்வொரு மாற்றத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் - அந்த மாற்றம் நம்மை புரட்டிப் போட்டு புதுப்பிக்க உதவியிருந்தால்.. காத...
18/06/2021

ஒவ்வொரு மாற்றத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் - அந்த மாற்றம் நம்மை புரட்டிப் போட்டு புதுப்பிக்க உதவியிருந்தால்..

காதலில் மட்டுமே இந்த மாயாஜாலம் சாத்தியமாகும். ஒவ்வொரு காதலனையும் கேட்டுப் பாருங்கள்... என்னவள் என்னில் புகுந்த பின்தான் என்னையே நான் உணர்ந்தேன் என்று கூறுவான். அது ஏனோ தெரியவில்லை. அப்பா, அம்மா சொல்லியும் கேட்காதவர்கள் கூட காதலன் அல்லது காதலி சொல்லும்போதுதான் உடனடியாக கேட்கிறார்கள் - காதலின் மாயமா அது?

ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், பதட்டம், உணர்ச்சிப் பிரவாகம்.. மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.

நீங்காத நினைவுகள் ஒவ்வொரு காதல் நினைவுகளும் நாள் ஆக ஆக மறைந்து போகலாம்... ஆனால் நிச்சயம் இளமை மட்டும் கூடிக் கொண்டேதான் போகும் - ஒவ்வொரு நாளும் ஒரு வித அழகை சேர்த்தபடி.

திரும்பிப் பார்க்கிறேன்... நான் விட்ட கண்ணீரை திரும்பிப் பார்க்கிறேன்.. அதில் நீ இல்லை.. ஆனால் என் சிரிப்பை சற்றே திருப்பிப் பார்க்கிறேன்... அதில் நீ மட்டுமே... அதை நினைக்கும்போதுதான் கண்ணில் முட்டுகிறது கண்ணீர்.

உன் இடைவெளியில் என்னைப் புதைக்கிறேன் உனது விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் என்னைப் புதைத்துக் கொள்கிறேன்.. காரணம், அந்த இடம் எனக்கானது.

மனசுக்குள் பத்திரப்படுத்து உன்னை என் மனதுக்குள் ஒரு வட்டம் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் - இதயத்தில் அல்ல. காரணம், இதயம் உடையக் கூடியதாயிற்றே... நீதானே என் உலகம் உலகத்துக்கு நீ யாரோ ஒருவராக இருக்கலாம்... ஆனால் எனக்கு நீ மட்டுமே உலகம். நீ மட்டுமே...! ஆயிரம் வார்த்தை சொல்லி உன்னை நினைவு கூறலாம்.. எனக்கு அது தேவையில்லை..நிஜமான நீ மட்டுமே வேண்டும். நீ அழகாய் இருப்பதால் உன்னை நான் நேசிக்கவில்லை. உன்னை நேசித்ததால் நான் அழகானேன்... ஒரு புன்னகையால் உலகம் மாறி விடப் போவதில்லை. ஆனால் உன் சின்னப் புன்னகையால் நான் மாறிப் போனேன்.. என்னையும் உன்னையும் தவிர இந்த உலகமே பைத்தியக்காரத்தனமானது -உன்னையும், என்னையும் தவிர - காரணம் நம்முடன் காதல் இருக்கிறதே !! நாம் தனித்துப் பிறந்தோம்.. தனித்தே வாழ்கிறோம்.. தனித்தே மரிப்போம்.. ஆனால் நம்மை சேர்த்திருப்பது காதல் மட்டுமே. என் மீது கோபம் வந்தால் சீக்கிரம் மன்னித்து விடு.. அழகாக முத்தமிடு... ஆழமாக காதலி...அன்போடு என்னை அரவணை..! உன்னை நேசிப்பது சுவாசிப்பது போல..சுவாசத்தை நிறுத்த முடியுமா...?

Address

Wellawatte
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Anbu Thasan -அன்பு தாசன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Club

Send a message to Anbu Thasan -அன்பு தாசன்:

Share