மட்டக்களப்பு வெடி

மட்டக்களப்பு வெடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மட்டக்களப்பு வெடி, Adult Entertainment Service, Batticaloa.

இலங்கை ஜனாதிபதிகளில் அநுர ரோயல் குடும்பத்தை சார்ந்த40 வருடங்கள் அரசியல் அனுபவம் பெற்ற ஒருவர் அல்ல.அநுர அரசுக்கு சர்வதேச ...
27/03/2026

இலங்கை ஜனாதிபதிகளில் அநுர ரோயல் குடும்பத்தை சார்ந்த
40 வருடங்கள் அரசியல் அனுபவம் பெற்ற ஒருவர் அல்ல.

அநுர அரசுக்கு சர்வதேச தொடர்புகள் எதுவும் கிடையாது. கேபினடில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை.
முஸ்லிம் எம்.பி. க்கள் இல்லாமல் அதுவும் ஹிஸ்புல்லா இல்லாமல் மத்திய கிழக்கில் இருந்து எரிபொருள் கொண்டு வர முடியாது.
அநுரவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதெல்லாம் இங்கு சிலருக்கு உயிர் போகும் அளவுக்கு பிரச்சினையாக இருந்தது.

ஆனால் அநுரவோ,
ரணிலை போல ஆங்கிலம் தெரியும் என்று கோட்டையும் சூட்டையும் மாற்றிக் கொண்டு மஹ்தி ஹஸனிடம் போய் மூக்குடையவும் இல்லை. ராஜபக்‌ஷக்கள் போன்று திறைசேறி நிதியை எடுத்து அவர்களது பெற்றோர்களுக்கு சிலை செய்தது போன்று தனது பெற்றோருக்கு சிலை செய்து பணத்தை வீணடிக்கவும் இல்லை.

இப்போது உள்ள நெருகடியை அறிந்து ஜனாதிபதி அநுர ரஷ்யாவுடன் கலந்துரையாடி
நாட்டுக்கு எரிபொருள் கிடைக்க ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த நேரத்தில் உலகின் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் லாக்டவுன் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தானில் எல்லாம் கிலோமீட்டர் கணக்கில் நீளமான எரிபொருள் வரிசைகளும் மக்கள் அந்த வரிசையில் அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இலங்கையிலோ பெரிய அளவில் எரிபொருள் வரிசைகள் இல்லை.
இருப்பினும் மே மாதம் வரை போர் நிலைமை தொடர்ந்தால் நிச்சயமாக எமது நாடும் எரிபொருள் தட்டுபாட்டை எதிர்நோக்கும்.
அதனால் ஜனாதிபதி அநுர முன்கூட்டியே சரியான முடிவை எடுத்து இப்போது ரஷ்யாவிலிருந்து நாட்டுக்கு எரிபொருள் கிடைக்க இருக்கிறது.

எது எப்படியோ இந்த மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி மக்களின் பெரும் ஆதரவை எவ்வாறு தக்கவைக்க வேண்டும் என்று எல்லோரையும் விட ஜனாதிபதி அநுரவுக்கு நன்கு தெரியும்.

இனி களுவாஞ்சிக்குடி சந்திலயும் நிண்டு தான் போகணும் புள்ளேய்!! கண்ட பாட்டுக்கு முறுக்கித்து போக ஏலா!
11/02/2026

இனி களுவாஞ்சிக்குடி சந்திலயும் நிண்டு தான் போகணும் புள்ளேய்!!
கண்ட பாட்டுக்கு முறுக்கித்து போக ஏலா!

ஓடிப்பாருங்களன் இனி..
22/01/2026

ஓடிப்பாருங்களன் இனி..

💎 கலஹா – டெல்தொட்டவத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட “நீல” பாறையின் மர்மத்தை கண்டறிய ரத்தின மற்றும் நகை ஆணையம் நேரில் ஆய்...
21/01/2026

💎 கலஹா – டெல்தொட்டவத்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட “நீல” பாறையின் மர்மத்தை கண்டறிய ரத்தின மற்றும் நகை ஆணையம் நேரில் ஆய்வு!

கலஹா, டெல்தொட்டவத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது வெளிப்பட்ட ஒரு கருப்பு பாறையின் ஒரு பகுதி, மிகத் தெளிவான ஒளிரும் நீல நிறத்தில் (Bright Blue) தோன்றுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பார்வையிலேயே மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றும் இந்த பாறை எது என்பதை இதுவரை உறுதியாக அடையாளம் காண முடியவில்லை. 🤔
இந்த விடயத்தை ஆராய்வதற்காக தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் நாவுல பிராந்திய அலுவலகம் தலையீடு செய்துள்ளது.

அந்த அலுவலகத்தின் அதிகாரியான P.D.A.P. சுபசிங்க அவர்கள் தெரிவித்ததாவது:
“நாளை எங்களது மொபைல் ஆய்வுக்கூடத்தை (Mobile Lab) அந்த இடத்திற்கு கொண்டு சென்று சிறப்பு பரிசோதனை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிந்த பின்னர், இது எந்த வகையான பாறை அல்லது கனிமம் என்பதைப் பற்றி அதிகாரப்பூர்வ முடிவிற்கு வர முடியும்.”

விபத்துக்குள்ளான குறித்த விமானம் பயணிகள் எவரையும் ஏற்றிச் செல்லவில்லை. விமானிகள் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தக...
07/01/2026

விபத்துக்குள்ளான குறித்த விமானம் பயணிகள் எவரையும் ஏற்றிச் செல்லவில்லை. விமானிகள் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தகவல்: முகநூலில் இருந்து.

HAPPY NEW YEAR  2026!!🎆 ✨Designed by: Ratheyan Gnanaprakasam | GR
31/12/2025

HAPPY NEW YEAR 2026!!🎆 ✨
Designed by:
Ratheyan Gnanaprakasam | GR

சம்பூரில் கரை ஒதுங்கியுள்ள ரொக்கட்டின் பாகம்------------------------------------------------சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்ப...
29/12/2025

சம்பூரில் கரை ஒதுங்கியுள்ள ரொக்கட்டின் பாகம்
------------------------------------------------
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் இன்று (28) மாலை இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் மாலையளவில் சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டில் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

1923 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பழைய கல்லடிப் பாலம் நிறுவப்பட்ட வேளையில், எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் _ ...
27/12/2025

1923 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பழைய கல்லடிப் பாலம் நிறுவப்பட்ட வேளையில், எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் _ Powered by AI

சுமார் 7,000 மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி 7 நாட்களில் சீரமைக்கப்பட்டஊவாபரணகம கடகௌல்பத பாதை.
15/12/2025

சுமார் 7,000 மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி
7 நாட்களில் சீரமைக்கப்பட்ட
ஊவாபரணகம கடகௌல்பத பாதை.

18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட நாவலப்பிட்டி- கண்டி வீதி 🛣️
15/12/2025

18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட நாவலப்பிட்டி- கண்டி வீதி 🛣️

சந்திரிகா என்ன தன் சொந்த காசிலிருந்து 250 மில்லியன் தூக்கி கொடுத்தாரா?? போன்ற பதிவுகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.. இந்தப்...
10/12/2025

சந்திரிகா என்ன தன் சொந்த காசிலிருந்து 250 மில்லியன் தூக்கி கொடுத்தாரா?? போன்ற பதிவுகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன..

இந்தப் பதிவு யுத்த விதிமுறைகளுக்கு மாறாக அப்பாவி மக்களையும் கொன்ற ஒரு ஜனாதிபதியை புனிதப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் இந்த அனர்த்த நிவாரணத்துக்காக பண்டாரநாயக்க நிதியத்தின் மூலமாக வழங்கப்பட்ட நிதியைப்பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவதற்காக...

1. இலங்கையின் புகழ்பெற்ற BMICH இன் மொத்த வருமானமும் பண்டாரநாயக்க நிதியத்திற்கு தான் செல்கின்றது. இலங்கை மக்களின் பணம் அல்ல இது - இது ஒரு நிறுவனத்தின் ஆண்டாண்டு கால இலாபமீட்டப்பட்ட பணம்.

2. BMICH பண்டாரநாயக்க குடும்ப நிறுவனமா? அவர்களா அதைக் கட்டினார்கள்? இல்லை. சீன அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பரிசு. ஆனால்... நிறுவன தலைமையும் நிர்வாகமும் பண்டாரநாயக்க குடும்பத்தின் வசம் தான் இருக்கும். எப்படி இலாபமீட்டும் வகையில் இதை நடத்தலாம்? பணத்தை எப்படிப் பயன்படுத்தலாம்? என்பதை பண்டாரநாயக்க குடும்ப மூத்த வாரிசு (இப்போது சந்திரிகா ) தான் தீர்மானிப்பார்கள்.

3. எப்படிப் பார்த்தாலும் இது அரச நிறுவனம் தானே? மக்கள் பணம் தானே? ஆம் பாராளுமன்றத்தில் 1975ம் ஆண்டு 2ம் இலக்க சட்டப்படி உருவாக்கப்பட்ட அரச நிறுவனம் ஆனால் கட்டுமானத்துக்கோ, நாளாந்த தொழிற்படு செலவினங்களுக்கோ இலங்கை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படவில்லை. மாறாக பண்டாரநாயக்க குடும்ப நிர்வாகம் மூலம் இலாபகரமாக இயங்கும் ஒரு நிறுவனம். இலங்கையில் எத்தனை அரச நிறுவனங்கள் இலாபமாக இயங்குகின்றன என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. திறைசேரியை நம்பியிருக்காத ஒரு நிறுவனம்.

4. முக்கியமாக '250 மில்லியன் பணம் இந்த நிதியத்திலிருந்து வழங்கப்பட வேண்டும்' என்ற முடிவை எடுத்தது சந்திரிகா தான். ஜேவிபி ஆட்சியில் நாடு எக்கேடும் கெடட்டும் என்றிருக்கவில்லை. அதற்காக அவரை பாராட்டுவதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை.

Copied

2025.11.27 அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.இரவு 9 மணி, பக்கத்து வீ...
08/12/2025

2025.11.27 அன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

இரவு 9 மணி, பக்கத்து வீட்டு ஆண்ட்டி வெள்ளம் வர இருப்பதாக கூறிச் சற்று கவனமாக இருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த 15 நிமிடத்தில் என்னுடைய சகோதரர் கடும் பதற்றத்துடன் வந்து கதவைத் தட்டினார்.. வீதிகளில் வெள்ளம் வர ஆரம்பித்து விட்டது உங்களை எனது வீட்டிற்குக் கூட்டி செல்லவே வந்தேன் என்றார்.

வயதான எனது பெற்றோரையும் இரண்டரை வயதிற்குற்பட்ட எனது இரு பிள்ளைகளையும் கூட்டிச்செல்லும் அளவிற்கான காலநிலை அப்போது காணப்படவில்லை இடியுடன்கூடிய பெருமழை மொத்த ஊரையும் சூழ்ந்து கொண்டிருந்தது. (நானும் எனது தாயும் அவருடன் செல்வதற்கு மறுத்ததற்குக் காரணம் அதுவே)

இருந்தாலும் எனக்கு மனதிற்குள் ஒரு பயம் இருக்கவே செய்தது. வீட்டில் என்னைத் தவிர திடகாத்திரமானவர்கள் யாரும் இல்லை என்னுடைய கனவரும் ஓர் அலுவல் நிமித்தமாக அக்கரைப்பற்றிற்கு சென்றிருந்தார் என்பதோடு பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்ட சற்று நடக்க இயலாத தந்தையை எப்படி கையாளுவேன் என்ற யோசனையும் எனது பயத்தை மேலும் அதிகரித்தது. அவசரத்திற்கு யாரையும் கூப்பிட தொலைபேசி இணைப்பும் செயற்படவில்லை.

எனது தாயிடம் இங்கு இருக்க வேண்டாம் சதீஷ் அண்ணாவின் வீட்டிற்றிக்கு (எனது வீட்டின் மேல் வீட்டில் வசிப்பவர்) செல்வோம் என்று கூறினேன். வெள்ளம் பற்றிய ஆபத்தை உணராத எனது தாய் வெளியில் செல்ல மறுத்து விட்டார்.

இரவு 10.30 போல வெளியே ஆட்கள் நடமாட்டமும் எப்போதும் இல்லாதவாறு அதிக சலசலப்பும் காணப்பட்டமை ஏதோ பெரிய ஆபத்து வர இருப்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது. எனவே யன்னல் வழியாக வெளியே பார்ப்பதும் வீட்டில் இருக்கும் மடிக்கணினி, கல்விச்சான்றிதழ்கள், நகைகள் போன்ற பொருட்களை பாதுகாப்பாக இருக்க வேண்டி உயரமான இடங்களில் வைப்பதுமாக இருந்தேன்.

நேரம் சரியாக 11 மணி காய்ச்சல் காரணமாக சரியாக 6 மணித்தியாலத்தில் மருந்து அருந்த வேண்டி இருந்ததால் மருந்தை அருந்திவிட்டு முன் கதவு யன்னல் எல்லாம் ஒழுங்காக அடைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்து விடுவோம் என்று கதவருகில் செல்ல.. என் கால்களில் தண்ணீர்.. வல்ல இறைவனை ஒரு கனம் நினைத்தவளாக பதறியடித்துக்கொண்டு ஓடிப் போய் எனது பெற்றோரை எழுப்பினேன். உடனே மேல்வீட்டு சதீஷ் அண்ணாவின் கதவைத் தட்டினேன். நான் தட்டிய கதவு சத்தம் கம்பளை முழுவதும் கேட்டிருக்கக் கூடும். சதீஷ் அண்ணா வெளியே வந்தார். பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் அங்கிளும் அங்கே தான் இருந்தார்கள்.

சதீஷ் அண்ணாவிடம் வீட்டிற்குள் தண்ணீர் வந்ததைக் கூறி உதவி கேட்டேன். தூங்கிக்கொண்டிருந்த என் இரு பிள்ளைகளையும் முதலில் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கிக் கொடுத்தேன். உம்மாவை மெதுவாக மேலே ஏறுமாறு கூறிவிட்டு வாப்பாவின் கையைப்பிடித்து மெதுவாகக் கூட்டி வரும்போது தண்ணீர் முழங்கால் வரை நிரம்பிவிட்டது. அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து நடக்க இயலாத வாப்பாவை பின்வாசல்வரை கூட்டி வந்துவிட்டேன். தண்ணீரின் கனம் தாங்க முடியாமல் வாப்பா சற்று தடுமாறிவிட்டார். அதைப்பார்த்த உம்மா கத்தவும் இருவரையும் தைரியப்படுத்தவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

வாப்பாவிடம் "வாப்பா ஒன்றுமில்லை உங்களால் ஏலும்; படியின் பிடி கனமாகவே உள்ளது, அதை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுங்கள் நானும் உங்களைப் பிடித்துக்கொள்வேன் பயப்பட வேண்டாம்" என்று கூறினேன். வாப்பாவும் அல்லாஹ்வின் உதவி கொண்டு ஏறிவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

வீட்டில் இருக்கும் பொருட்கள் எதையும் எடுத்துவர முடியுமா என்று யோசித்து கீழே இறங்க முற்பட்டபோது வீட்டினுள் ஏதோ சத்தம் கேட்க, தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை உயிர் பிழைத்தவரை போதும் என நினைத்துக்கொண்டு மேலே சென்றுவிட்டேன்.

அன்று இரவு முழுவதும் யாரும் தூங்கவில்லை. விடியல் வரை தண்ணீர் மெதுவாக ஏறிக்கொண்டே இருந்தது. சதீஷ் அண்ணாவின் வீட்டிற்கும் தண்ணீர் வந்துவிட்டால் எங்கும் செல்வதற்கு வேறு வழியும் இல்லை. மின் இணைப்பையும் துண்டித்து விட்டார்கள். அன்று முழுவதும் இவைதான் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

காய்ச்சல் என்று நான் முன்னரே தூங்கி இருந்தால்...

இன்னும் 15 நிமிடம் தாமதமாகி இருந்தால்...

வாப்பா தடுமாறிய நேரம் விழுந்து இருந்தால்..

இவ்வாறு பல்வேறு யோசனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என் இரு பிஞ்சுகள் தூங்குவதைப் பார்க்கும் போது வரவிருந்த ஆபத்தை எண்ணி இதயம் இறுகிப் போனது..

விடிந்த பின்னர் வெளியே பார்த்தால் ஒரு கனம் இதயம் நின்று துடித்தது.. எனக்கு ஏதோ ஒரு தீவின் நடுவே மாட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சதீஷ் அண்ணாவின் வீட்டிற்கு தண்ணீர் வருவதற்கு ஒரு படியே எஞ்சியிருந்தது. எனது வீடு முற்றும் முழுதாக தண்ணீரால் நிரம்பி காணப்பட்டது..

இயற்கை அனர்த்தம் என்ற ஒன்றை சந்தித்தது இதுவே முதல் முறை. அன்றைய நாளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.. அடுத்தநாள் தண்ணீர் இரங்கிய பின்னர் வீட்டை சென்று பார்த்தேன் கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிட்டது..

எல்லாம் வல்ல இறைவன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் துயரிலிருந்து மீண்டுவர தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.😐

(வெள்ளம் ஏற்பட்ட மறுநாள் காலை இரண்டு அடிக்கு தண்ணீர் வற்றிய பின்னர் மேல் மாடியில் இருந்து எடுக்கப்பட்ட மற்றும் வெள்ளம் முற்றாக வற்றிய பின்னர் வீட்டிற்குள் சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)

(Mifra Aazath)
Copied

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மட்டக்களப்பு வெடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Club

Send a message to மட்டக்களப்பு வெடி:

Share